திருப்பத்தூரை அடுத்த சின்னாரம்பட்டி கிராமம் அருகே, பாம்பாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது. பாம்பாற்றின் குறுக்கே விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக தமிழக அரசு சார்பில், பொதுப்பணித்துறை, நீர்வள ஆதாரத் துறை ஆகியவை, நபார்டு வங்கி நிதி உதவியுடன், 2 கோடியே 48 லட்சம் ரூபாய் மதிப்பில் தடுப்பணை கட்டப்பட்டு வருகிறது.
இந்த தடுப்பணை கட்டுவதால், அருகில் உள்ள நாயக்கனூர், சின்னபேராம்பட்டு, மங்களப்பள்ளி உள்ளிட்ட 10 க்கும் மேற்பட்ட கிராமத்தில் உள்ள ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களில், நிலத்தடி நீர் உயர்வதோடு, குடிநீர் தட்டுப்பாடு முழுமையாக நீங்கும் என அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். 12 மாதங்களில் பணியை முடிக்க திட்டமிடப்பட்ட நிலையில், 4 மாதங்களில் 70 சதவீத பணிகள் முடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.