கொள்முதல் விலை உயர்வால் பால் உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி

பால் கொள்முதல் விலையை உயர்த்திய தமிழக அரசிற்கும் முதலமைச்சருக்கும், பால் உற்பத்தியாளர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

இரண்டு ஆண்டுகளாக கால்நடை தீவனம் கடும் உயர்வை சந்தித்து வந்த நிலையில், பால் உற்பத்தியாளர்களுக்கு நஷ்டத்திற்கு உள்ளாகி வந்தனர். இந்தநிலையில், தமிழக அரசு பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டது. இந்த அறிவிப்பால் மகிழ்ச்சியடைந்துள்ள பால் உற்பத்தியாளர்கள், கொள்முதல் விலையை உயர்த்தி தங்களது வாழ்வாதாரத்திற்கு வழிவகை செய்து கொடுத்த தமிழக அரசிற்கும் முதலமைச்சருக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

Exit mobile version