தமிழகத்தில் 24 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு

தமிழ்நாட்டில் கொரோனா தினசரி பாதிப்பு 24 ஆயிரத்து 898 ஆக அதிகரித்துள்ளது.

தமிழ்நாடு சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், வெளி மாநிலத்தவர் 27 பேர் உள்பட 24 ஆயிரத்து 898 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு லட்சத்து 31 ஆயிரத்து 468 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். பாதிக்கப்பட்டவர்களில் 14 ஆயிரத்து 683 பேர் ஆண்கள் என்றும், 10 ஆயிரத்து 215 பேர் பெண்கள் என்றும் சுகாதாரத்துறை கூறியுள்ளது.சென்னையில் மேலும் ஆறாயிரத்து 678 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பிற மாவட்டங்களில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 18 ஆயிரத்து 220 ஆக அதிகரித்துள்ளது.கோவையில் இரண்டாயிரத்து 68 பேரும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 2 ஆயிரத்து 39 பேரும், திருவள்ளூரில் ஆயிரத்து 560 பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மதுரையில் 996 பேரும், காஞ்சிபுரத்தில் 836 பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.20 ஆயிரத்து 62 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், ஒரே நாளில் 167 பேர் கொரோனா தொற்றுக்கு பலியாகியுள்ளனர்.

Exit mobile version