சற்று குறைந்த இந்தியாவின் கொரோனா தினசரி பாதிப்பு

இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு 46 நாட்களுக்கு பிறகு ஒரு லட்சத்து 65 ஆயிரமாக குறைந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வருகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் ஒரு லட்சத்து 65 ஆயிரத்து 553 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2 கோடியே 78 லட்சத்து 94 ஆயிரத்து 800 ஆக அதிகரித்துள்ளது.

ஒரே நாளில் கொரோனாவால் 3 ஆயிரத்து 460 பேர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 3 லட்சத்து 25 ஆயிரத்து 972 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது 21 லட்சத்து 14 ஆயிரத்து 508 பேர் சிகிச்சையில் உள்ளதாகவும், இதுவரை 21 கோடியே 20 லட்சத்து 66 ஆயிரத்து 614 பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டதாகவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Exit mobile version