இந்தியாவில் கொரோனா பரவல் மெல்ல மெல்ல குறைந்து வரும் நிலையில், தினசரி தொற்று பாதிப்பு மீண்டும் 3 லட்சத்துக்கு கீழ் சென்றுள்ளது.
இந்தியாவில் டெல்லி, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் விதிக்கப்பட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகள் காரணமாக கொரோனா பரவல் மெல்ல மெல்ல குறைந்து வருகிறது.
இதனால், நாடு முழுவதும் நேற்று தினசரி பாதிப்பு 3 லட்சத்து 6 ஆயிரத்து 64ஆக இருந்த நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் மட்டும், 2 லட்சத்து 55 ஆயிரத்து 874 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் பாதிப்பு எண்ணிக்கை நேற்றைவிட 50 ஆயிரத்து 190 குறைந்துள்ளது. தினசரி கொரோனா பாதிப்பு விகிதம் 15 புள்ளி 52 சதவீதமாக உள்ளது.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 614 பேர் உயிரிழந்ததை அடுத்து, இறப்பு எண்ணிக்கை 4 லட்சத்து 90 ஆயிரத்து 462 ஆக அதிகரித்துள்ளது.
வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில், 2 லட்சத்து 67 ஆயிரத்து 753 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். கொரோனா பாதித்த 22 லட்சத்து 36 ஆயிரத்து 842 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.