இந்தியாவில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு மீண்டும் 38 ஆயிரமாக குறைந்துள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில், புதிதாக 38 ஆயிரத்து 667 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் நாட்டின் ஒட்டுமொத்த பாதிப்பு 3 கோடியே 21 லட்சத்து 55 ஆயிரமாக உயர்ந்துள்ளது. வைரஸ் தொற்றுக்கு ஒரே நாளில் 478 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, இறப்பு எண்ணிக்கை 4 லட்சத்து 30 ஆயிரத்து 732ஆக உயர்ந்துள்ளது. 35 ஆயிரத்து 743 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர். 3 லட்சத்து 87ஆயிரத்து 673 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். நாடு முழுவதும் இதுவரை 53 கோடியே 61 லட்சத்து 89 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை கூறியுள்ளது.