சந்தானம்-யோகிபாபு காம்பினேஷனில் உருவாகும் “டகால்டி” – மோஷன் போஸ்டர் வெளியீடு

“A1” படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் சந்தானம் நடிக்கும் அடுத்த படம் “டகால்டி”. விஜய் நரேன் இயக்கும் இந்த படத்தில் நடிகை ரித்திகா சென், ராதாரவி, தருண் அரோரா ஆகியோர் நடித்துள்ளனர். நடிகர் யோகிபாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

நவம்பர் மாதம் வெளியாகவுள்ள இந்த படத்தின் போஸ்டர் சில தினங்களுக்கு முன் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் தற்போது டகால்டி படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது. இதில் படத்தில் இடம் பெறும் சண்டைக்காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இதனால் படம் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Exit mobile version