களத்திற்கு உள்ளே அப்பா….வெளியே மகள்…..உற்சாகத்தில் ரசிகர்கள்

ஐபிஎல் சீசன் ஆரம்பித்தாலும் ஆரம்பித்தது தினம் ஒரு காட்சி சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. கடந்த 4 நாட்களில் வீரர்கள் வைரல் ஆனார்களோ இல்லையோ சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனி,அவரது மகள் ஸிவா ஆகியோரின் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் மிகப்பெரிய வைரலாகி வருகிறது.

நேற்று நடைபெற்ற டெல்லி அணியுடனான ஆட்டத்தில் இரண்டாம் பாதியில் சென்னை அணி பேட்டிங் செய்த போது தோனி களமிறங்கி விளையாடினார். அப்போது அவரது மகள் ஸிவா “கோ பப்பா கோ” என்று ரசிகர்களுடன் சேர்ந்து தனது தந்தையை உற்சாகப்படுத்தினார். அந்த போட்டியின் கடைசியில் தோனி சிக்ஸ் அடித்து அணியின் வெற்றிக்கு உதவினார்.

அதற்கு இரண்டு நாட்கள் முன்பு, சேப்பாக்கத்தில் சென்னை அணி தனது முதல் ஆட்டத்தில் பெங்களூருவை எதிர்கொண்டது. அந்த ஆட்டத்தில் நடுவே தனுஷ் நடித்த ஆடுகளம் திரைப்படத்தில் வரும் ” ஒத்த சொல்லால” பாடலுக்கு நடனம் ஆடிய வீடியோ அந்த நாளில் வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டது.

மற்றொரு வீடியோ தோனி தனது மகளுடன் பேசுவது போன்று வெளியானது. அதில் தோனி ஸிவாவிடம் 6 மொழிகளில் கேள்விக் கேட்கிறார். அதற்கு சற்றும் அசராமல் ஸிவா தோனியின் கேள்விகளுக்கு அவர் கேட்ட மொழிகளிலேயே பதிலளித்து ஆச்சர்யப்பட வைத்துள்ளார்.

களத்திற்கு உள்ளே அப்பா…களத்திற்கு வெளியே மகள்…என்று தங்களை உற்சாகப்படுத்துவதால் தோனியின் ரசிகர்கள் படை மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

Exit mobile version