டி.கே.சிவகுமார் மகளிடம் அமலாக்கத் துறை 7 மணி நேரம் விசாரணை

சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள, கர்நாடக முன்னாள் அமைச்சர் சிவகுமாரின் மகளிடம் அமலாக்கத் துறையினர் 7 மணி நேரம் விசாரணை நடத்தினர்.

சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கில் கர்நாடக முன்னாள் அமைச்சர் சிவக்குமாரை கடந்த 3ஆம் தேதி அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். பல கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்ததாக கடந்த ஆண்டு சிவக்குமார் மீது வழக்குபதிவு செய்யப்பட்டது. தற்போது அமலாக்கத் துறை காவலில் இருக்கும் சிவகுமாரை மருத்துவ பரிசோதனைக்காக அமலாக்கத் துறையினர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். சிவகுமாரை பார்க்க மருத்துவமனைக்கு சென்ற கர்நாடகா முன்னாள் முதலமைச்சர் சித்தராமையாவையும், சிவக்குமாரின் சகோதரர் சுரேஷ் ஆகியோரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். இதனிடையே, சிவகுமாரின் மகள் ஐஸ்வர்யாவிடம் அமலாக்கத் துறையினர் 7 மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளனர். இன்றும் விசாரணைக்கு ஆஜராக அவர்கள் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. நீதிமன்ற காவல் முடிந்ததை அடுத்து சிவகுமார் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Exit mobile version