சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 6.52 காசுகளாக குறைப்பு

வெகு நாட்களுக்கு பிறகு மானிய விலை சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை 6 ரூபாய் 52 காசுகள் குறைத்ததுடன், மானியமில்லாத சிலிண்டரின் விலையை 133 ரூபாய் குறைத்து எண்ணெய் நிறுவனங்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளன
கடந்த இரண்டு மாத காலமாக பெட்ரோல் மற்றும் டீசலின் விலை குறைந்து வருகிறது. ஆனால் சமையல் எரிவாயு விலை குறைக்கப்படவில்லை. இதனால் பொது மக்களிடையே அதிருப்தி நிலவியது. இந்த நிலையில் எண்ணெய் நிறுவனங்கள் 6 மாதத்திற்கு பிறகு சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை குறைத்துள்ளன. அதன்படி மானிய விலை சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 6 ரூபாய் 52 காசுகள் குறைக்கப்பட்டுள்ளது. 942 ரூபாய் 50 காசுக்கு விற்கப்பட்ட மானியமில்லாத சிலிண்டரின் விலை 133 ரூபாய் குறைக்கப்பட்டு 809 ரூபாய் 50 காசுக்கு விற்கப்பட உள்ளது. விலை குறைப்பு சனிக்கிழமை முதல் அமலுக்கு வருகிறது.

Exit mobile version