மத்திய கிழக்கு வங்கக் கடலில் புதிதாக புயல் உருவாக வாய்ப்பு

மத்திய கிழக்கு வங்கக் கடலில் புதிதாக புயல் உருவாக வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதியில், வரும் 22 ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகும் என தெரிவித்துள்ளது.

இந்த காற்றழுத்த தாழ்வு நிலை படிப்படியாக வலுப்பெற்று, வரும் 24 ஆம் தேதி புயலாக உருமாற வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

புயல் உருவானால், அதற்கு யாஷ் என பெயரிடப்படும் என்றும், அந்த புயல் நகர்ந்து, ஒடிசா – மேற்குவங்கம் இடையே கரையை கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

இதேபோல், அடுத்த 24 மணி நேரத்தில் தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதியில், தென்மேற்கு பருவமழை துவங்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Exit mobile version