ஒருவழியாக கரையை கடந்த டவ் -தே புயல்!

மும்பை நகரை புரட்டி போட்ட டவ்-தே புயல் குஜராத் மாநிலத்தின் போர்பந்தர்-மாகுவோ இடையே கரையை கடந்தது.

தென்கிழக்கு அரபிக் கடலில் உருவான டவ்-தே புயல் நேற்று அதி தீவிர புயல் தீவிரமடைந்து வேகமாக நகர தொடங்கியது. இதன் காரணமாக ஒரு நாள் முன்னதாகவே நேற்று இரவு 9 மணி அளவில் குஜராத் மாநிலம் போர்பந்தர்-மாகுவா இடையே கரையை நெருங்கியது. முன்னதாக மும்பை கடல்பகுதியில் 145 கிமீ தொலைவில் புயல் நகர்ந்து சென்றது. இதனால் மும்பையில் நேற்று 120 கிமீ வேகத்தில் சூறைக்காற்று வீசியது, இடைவிடாத மழையும் கொட்டி தீர்த்தது. இதன் காரணமாக மும்பை நிலைகுலைந்து போனது. குஜராத் மாநிலத்தில் கரையை கடக்கும் போது 180 கிமீ வேகத்தில் சூறைக்காற்று வீசியது.

அங்கு கடலோர மாவட்டங்களில் சூறைக்காற்று, மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் சாய்ந்தன. அவற்றை பேரிடர் மீட்புக் குழுவினர் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குஜராத்தில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டனர்.மகாராஷ்டிர மாநிலத்தில் டவ்தே புயல் காரணமாக, 6 பேர் உயிரிழந்தனர். சுமார் 10 பேர் படுகாயமடைந்தனர். மும்பையில் 114 கிலோமீட்டர் வேகத்திற்கு பலத்த காற்று வீசியதால் மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் சாய்ந்தன. இதன்காரணமாக, மின் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் தக்ஷின கன்னடா, உடுப்பி, குடகு உள்ளிட்ட 6 மாவட்டங்களில், 121 கிராமங்கள் கடும் பாதிப்பை சந்தித்தன. கேரளமாநிலத்தில் ஆயிரத்து 500 வீடுகள் சேதமடைந்தன.

Exit mobile version