கஜா புயலால் பாதிக்கப்பட்ட 70 சதவிகித விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டு விட்டதாக வேளாண் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த நவம்பர் மாதம் வீசிய கஜா புயலால், டெல்டா மாவட்டங்கள் உட்பட 10-க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரண தொகை வழங்கப்பட்டு வருகிறது. வேளாண் துறை சார்பில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் கணக்கெடுக்கப்பட்டு அவர்களுக்கு இழப்பீடு தொகை வழங்கப்பட்டு வருகிறது.
70 சதவிகிதத்துக்கும் அதிகமான விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டு விட்டதாகவும், இன்னும் 15 நாட்களுக்குள் முழுமையாக இழப்பீட்டு தொகை வழங்கப்பட்டு விடும் என்றும் வேளாண் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Discussion about this post