காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஏப்ரல் 30ம் தேதி வட தமிழகம் வரும் என்றும் ஒருசில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.
வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த நிலை, குறைந்த காற்றழுத்த மண்டலமாக மாறக்கூடும். அதன் பின்னர் புயலாக மாறி வட தமிழகம் நோக்கு வரக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த புயலுக்கு ஃபானி என பெயரிடப்பட்டுள்ளது.
புயல் எச்சரிக்கை காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன்,காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஏப்ரல் 30ம் தேதி வடதமிழகம் வரும் என்றும் ஒருசில பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.
30ம் தேதி வரை மீனவர்கள் கடலுக்குள் செல்லவேண்டாம் என்று எச்சரித்துள்ளார். காற்றழுத்த தாழ்வு மண்டலம் தொடர்பாக ரெட் அலர்ட் எதுவும் விடுக்கப்படவில்லை என்றும் பாலச்சந்திரன் குறிப்பிட்டார்.