நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை கூறி மக்களை ஏமாற்றுவது திமுக – சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம்

நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை கூறி மக்களை ஏமாற்றுவது திமுக என, சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் குற்றம்சாட்டியுள்ளார். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த கூட்டேரிப்பட்டில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 72வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், தமிழகத்தில் தற்போது பெண் குழந்தைகள் அதிகளவில் கல்வி பயில்வதற்கு, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவே காரணம் என்றும், கல்விக்காக மட்டும் 36 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். தமிழகத்தில் மீண்டும் அதிமுக அரசையே மக்கள் மலரச் செய்ய வேண்டும் எனவும் அமைச்சர் சி.வி.சண்முகம் கேட்டுக் கொண்டார். மேலும், நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை கூறி மக்களை ஏமாற்றுவது திமுக என அவர் குற்றம்சாட்டினார்.

Exit mobile version