திண்டிவனத்தில் போலியோ சொட்டு மருத்துவ முகாமை தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் துவக்கி வைத்தார். நகராட்சி அங்கன்வாடி மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு அமைச்சர் சிவி.சண்முகம் போலியோ மருந்து வழங்கினார். விழுப்புரம் மாவட்டத்தில் 2 ஆயிரத்து 476 மையங்களில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ மருந்து வழங்கப்பட உள்ளது.
கோவை அரசு மருத்துவமனையில் போலியோ சொட்டு மருத்து முகாமை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி துவக்கி வைத்தார். கோவை மாவட்டத்தில் 3 லட்சத்து 33 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்படுகிறது. கிராமப்புறங்களில் ஆயிரத்து 202 மையங்களும், நகர்ப்புறங்களில் 379 என மொத்தம் 1581 சொட்டு மருந்து வழங்கும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மதுரை எம்.ஜி.ஆர். பேருந்து நிலையத்தில் நடைபெற்ற முகாமில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, குழந்தைகளுக்கு போலியோ மருந்து கொண்டு முகாமை துவக்கி வைத்தார். மதுரை மாநகர் பகுதியில் 462 முகாம்களில் 1860 ஊழியர்கள் மூலம் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோசொட்டு மருந்துவ முகாம் நடைபெற்று வருகிறது. மதுரை மாவட்டம் முழுவதும் 1705 முகாம்களில் 7412 ஊழியர்கள் மூலம் 2 லட்சத்து 85 ஆயிரத்து 460 குழந்தைகளுக்கு போலியோ மருந்து வழங்கப்பட உள்ளது.
திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமை பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர்
நலத்துறை அமைச்சர் வளர்மதி, குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கி துவக்கி வைத்தார். இதையடுத்து ரயில்வே மற்றும் பேருந்து நிலையங்களிலும், திருச்சியிலிருந்து ரயில்களில் பயணம் செய்யும் குழந்தைகளுக்கும் சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Discussion about this post