ஜாமின் கையெழுத்து போட வந்தவருக்கு அரிவாள் வெட்டு

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் ஜாமினில் வெளிவந்தவரை சரமாரியாக வெட்டியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

இடது கை ,மற்றுல் காலில் சரமாரியாக வெட்டுபட்ட நிலையில் ரத்தம் சொட்ட சொட்ட நின்றிருக்கும் இவரின் பெயர் இருளப்பன்.

இன்னொரு புறம் இருளப்பனை தங்களது செல்போன்களில் வீடியோ எடுக்கும் கூட்டம்.

திண்டுக்கல் மாவட்டம் பழனி பத்ரா தெருவை சேர்ந்த இருளப்பன் மீது பழனி காவல் நிலையத்தில் திருட்டு வழக்குகள் உள்ளன. கடந்த மாதம் செல்போன் திருட்டு வழக்கில் சிக்கி சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ள இருளப்பன், பழனி நகர் காவல்நிலைத்தில் கையெழுத்திட்டு வந்தார். காவல்நிலையத்தில் கையெழுத்து போட்டுவிட்டு வீட்டிற்கு செல்லும்போது தான் இருளப்பனை மர்மநபர்கள் சுற்றி வளைத்து அரிவாளால் வெட்டி விட்டு தப்பியோடியுள்ளனர். படுகாயமடைந்த இருளப்பனை போலீசார் உடனடியாக ஓர் ஆட்டோவில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சமபவம் பழனியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Exit mobile version