போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் விதமாக சுங்கச்சாவடிகள் விரைவில் 6 வழித்தடமாக மாற்றப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தின் போது, மதுரை ரிங் ரோடு சுங்கச்சாவடி வசூல் குறித்து திமுக உறுப்பினர் தங்கம் தென்னரசு கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்து பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மதுரை மாநகர மக்கள் கோரிக்கையை ஏற்று இரண்டு வழிச்சாலையாக இருந்த ரிங் ரோடு, நான்கு வழிச்சாலையாக மாற்றப்பட்டது என்றும், அதற்கான செலவு அதிகளவில் இருப்பதால் குறைந்த இடைவெளியில் 3 இடங்களில் சுங்க கட்டணம் வசூலிக்கப்படுவதாக விளக்கம் அளித்தார்.