சென்னை விமானநிலையத்தில் சுங்கத்துறையினர் சோதனை

சென்னை விமான நிலையத்தில் அடுத்தடுத்து நடத்தப்பட்ட சோதனையில் 96 லட்சம் ரூபாய் மதிப்புடைய 2.9 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் தொடர்புடைய, ஒரு பெண் பயணி உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை விமான நிலையத்தில் ஷார்ஜாவிலிருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி கொண்டு வரப்பட்ட 42 லட்சம் ரூபாய் மதிப்புடைய 1.3 கிலோ தங்கப் பவுடரை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர். தங்கக் கட்டிகளை பவுடராக மாற்றி மஞ்சள் வண்ண மெட்டல் பவுடரில் கலந்து உள்ளாடைக்குள் மறைந்து கொண்டுவந்த பெண் பயணியை சுங்கத்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இதேபோன்று, இலங்கையில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி கொண்டு வந்த 54 லட்சம் ரூபாய் மதிப்புடைய 1.6 கிலோ தங்கத்தை சுங்கத் துறையினர் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக சென்னை மற்றும் ராமநாதபுரத்தை சேர்ந்த 5 பயணிகளை சுங்கத்துறையினர் கைது செய்தனர்.

Exit mobile version