ஈரோடு மாவட்டம் அந்தியூர் கால நடை சந்தையில் சுங்கவரி வசூல் ரத்து செய்யப்பட்டதற்கு விவசாயிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
அந்தியூரில் உள்ள புதுப்பாளையம் குருநாத சுவாமி கோவிலில் ஆடி பெருந்திருவிழா புதன் கிழமை நடைபெறவுள்ளது. இந்த நிலையில், இங்குள்ள கால்நடை சந்தைக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வியாபாரிகளும், விற்பனையாளர்களும் மாடுகள், குதிரைகளை கொண்டு வருவார்கள். அவர்களிடம் சுங்க வரி வசூலிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் வறட்சி நிலவி வருவதால், சுங்க தொகையை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனை ஏற்று மாவட்ட ஆட்சியர் கதிரவன் சுங்கவரியை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார். இதனால் அப்பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.