நாளை முதல் உணவகங்களில் வாடிக்கையாளர்கள் அமர்ந்து உண்ண அனுமதி!!

உணவகங்களில் நாளை முதல் வாடிக்கையாளர்கள் அமர்ந்து உணவருந்த அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னையில் முழுவீச்சில் ஹோட்டல்கள் தயாராகி வருகின்றன.

5-ம் கட்டமாக ஜுன் 30 வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் மேலும் பல தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. நாளை முதல் சில கட்டுப்பாடுகளுடன் உணவகங்கள் திறக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, உணவகங்கள் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, உணவகங்கள் துரிதகதியில் தயாராகி வருகின்றன. உணவகங்களில், கிருமிநாசினி தெளிப்பது, சமூக இடைவெளியை பின்பற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Exit mobile version