பாடத்திட்டம்,தேர்வு குறித்து கல்வி ஆணையர் குழு விரைவில் அறிக்கை – அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்

கல்வித் தொலைக்காட்சி மற்றும் பொதிகை தொலைக்காட்சி மூலம் மாணவர்களுக்கு பாடம் நடத்த ஏற்பாடுகள் நடைபெற்றுவருவதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். சென்னை கோட்டூர்புரத்தில் நமது நியூஸ் ஜெ செய்தியாளருக்கு பேட்டி அளித்த அமைச்சர் செங்கோட்டையன், பள்ளிகள் திறப்பு குறித்து தற்போது வரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும், காலதாமதமாக பள்ளிகள் திறக்கப்பட இருப்பதால் என்னென்ன மாற்றங்கள் செய்யவேண்டும் என்பது குறித்து பள்ளிக் கல்வி ஆணையர் தலைமையிலான குழு ஆலோசனை நடத்தி வருவதாகவும் கூறினார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் ஆலோசனைக் குழுவினர் பரிந்துரை அறிக்கையை தாக்கல் செய்த பின்னர்தான் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தெரியவரும் என்றும் அவர் தெரிவித்தார். காலாண்டுத் தேர்வு நடத்துவது, பாடத்திட்டங்கள் குறைப்பு குறித்தும், ஆன்லைன் வழி கல்விக்கான விதிமுறைகள் உருவாக்குவது குறித்தும் ஆலோசனை நடைபெற்று வருவதாகவும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

Exit mobile version