செப்டம்பர் மாதம் 13ஆம் தேதி மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வை திட்டமிட்டபடி நடத்த, மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதே சமயம், கொரோனா சூழல் காரணமாக, நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டுமென பல்வேறு மாநிலங்களின் சார்பில் மத்திய அரசுக்கு கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், தமிழக மாணவர்களின் நலன் கருதி, நடப்பாண்டு நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என மத்திய அரசிடம் தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தனுக்கு, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் எழுதியுள்ள கடிதத்தில், கொரோனா சூழலை கவனத்தில் கொண்டு, இந்த ஆண்டு நீட் தேர்வை கைவிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், மாணவர்களின் 12 ஆம் வகுப்பு மதிப்பெண்களை அடிப்படையாக கொண்டு, தமிழகத்தில் மருத்துவப் படிப்புக்கான சேர்க்கையை நடத்திட அனுமதிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.