நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் உலக பாரம்பரிய தினத்தையொட்டி பழங்கால நாணய கண்காட்சி நடைபெற்றது.
இந்த கண்காட்சியில் சங்க காலம் தொட்டு வழங்கி வந்த மூவேந்தர் முத்திரைக் காசுகளும், பெருவழுதி நாணயம், செழியன் காசு போன்ற பாண்டிய மன்னர்களின் நாணயங்கள் உள்பட பல்வேறு வகையான நாணயங்கள், காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன.
தொடர்ந்து 5 நாட்கள் நடைபெறும் கண்காட்சியை கண்டு பயன் பெற அனைத்து பள்ளிகளுக்கும் அரசு அருங்காட்சியம் சார்பில் தகவல் அனுப்பப்பட்டுள்ளது.
ஆங்கிலேயர் காலத்தில் வீரபாண்டிய கட்டபொம்மனின் தம்பி ஊமைத்துறை ஆங்கிலேயரால் பிடிக்கப்பட்டு சிறை வைக்கப்பட்ட சிறைச்சாலை தான் இப்போது அருங்காட்சியமாக மாற்றப்பட்டுள்ளது. இந்த கண்காட்சியை மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.