சுருண்டது இங்கிலாந்து; ஆஸ்திரேலியா முன்னிலை

ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின், 3-வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வலுவான நிலையில் உள்ளது.

ஆஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி, லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 179 ரன்கள் எடுத்தது. அதனை தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 67 ரன்களுக்கு சுருண்டது. இதனையடுத்து ஆஸ்திரேலிய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆடி வருகிறது. 2-ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்களை எடுத்துள்ளது. இங்கிலாந்து அணியை விட 283 ரன்கள் முன்னிலை பெற்று ஆஸ்திரேலிய அணி வலுவான நிலையில் உள்ளது.

Exit mobile version