இங்கிலாந்தில் ஊரடங்கு ஜூன் 1ம் தேதி வரை நீட்டிப்பு

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், அதிக பாதிப்புகளை சந்தித்த நாடுகள் பட்டியலில் இங்கிலாந்து 3வது இடத்தில் உள்ளது. அங்கு இரண்டு லட்சத்து 19 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் போரிஸ் ஜான்சன், கொரோனா வைரசை முழுமையாக கட்டுப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் அனைவரும் உள்ளதாகவும், மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிப்பது அவசியம் எனவும் கூறினார். வரும் புதன்கிழமை முதல் சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதாக தெரிவித்த அவர் பொதுமக்கள் பூங்காக்களுக்கு செல்லலாம் எனவும், மைதானங்களில் விளையாடலாம் என்றும் கூறினார். ஆனால் பொது இடங்களுக்கு குடும்பத்தினருடன் மட்டுமே செல்ல வேண்டும் என்று தெரிவித்தார். கடைகள், தொடக்க பள்ளிகளை ஜூன் 1ம் தேதி திறக்க முடிவு செய்துள்ளதாக குறிப்பிட்ட போரிஸ் ஜான்சன், விதிமுறைகளை மக்கள் முறையாக கடைபிடிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

Exit mobile version