புதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு, மே 31 வரை நீட்டிக்கப்படுவதாக துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வந்ததால், கடந்த 10ம் தேதி முதல் நாளை வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த நிலையில், துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுச்சேரியில் வருகிற 31ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார். பால், மருந்து போன்றவை எந்த தடையும் இல்லாமல் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், அத்தியாவசிய கடைகள் பகல் 12 மணி வரை செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.