கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியதால் ஜெர்மனியில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஜெர்மனியில் நாள்தோறும் கொரோனா பாதிப்பால் ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழப்பதால் மீண்டும் கட்டுப்பாடுகளை விதிக்க முடிவு செய்யப்பட்டது. இதன்படி வரும் ஜனவரி 10 ஆம் தேதி வரை உணவு பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளை தவிர மற்ற அனைத்து கடைகளையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. அலுவலகப் பணியாளர்கள் வீட்டில் இருந்தே பணிகளை மேற்கொள்ளவும் ஆணையிடப்பட்டுள்ளது.