திருச்செந்தூர் முருகன் கோயிலில் நாளை சூரசம்ஹார விழா நடைபெறுவதை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன
கடந்த 28ம் தேதி யாகசாலை பூஜையுடன் கந்த சஷ்டி விழா துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நாளை நடைபெறுகிறது. சூரசம்ஹாரத்திற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூரில் தங்கி விரதமிருந்து வருகின்றனர். மேலும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூருக்கு வருகை தர உள்ளனர். இதனால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. கடலில் புனித நீராடும் பக்தர்கள் ஆழமான பகுதிக்கு செல்லாமல் இருக்க பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டுள்ளது. நகரின் முக்கிய வீதிகளில் 70 கண்காணிப்பு காமிராக்கள் அமைக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு பணியில் 3000 க்கும் மேற்பட்ட காவலர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர். மேலும் சூரசம்ஹாரா நிகழ்வை காண்பதற்கு 10 இடங்களில் எல்.இ.டி டிவிகள் அமைக்கப்பட்டு வருகின்றன. தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கபட்டுள்ளது. பக்தர்களின் வசதிக்காக தேவையான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது.