கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் உள்ள வைத்தியநாதசுவாமி கோயிலில், ஆடிப்பூர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. பிரசித்தி பெற்ற அசலாம்பிகை உடனுறை வைத்தியநாதசுவாமி கோயிலில், ஆடிப்பூர திருக்கல்யாண விழாவை ஒட்டி கொடியேற்ற நிகழ்ச்சி இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
11 நாட்கள் நடைபெறும் விழாவில், 10ஆம் நாளில் சுவாமி திருக்கல்யாணம் நடைபெறுகிறது. திருவிழாவுக்கான பணிகளை இந்து அறநிலைதுறை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.