வன விலங்குகளை பாதுகாக்க கூடலூர் – மைசூர் இடையேயான சாலையை நிரந்தரமாக மூட வேண்டும் என கர்நாடகாவை சேர்ந்த தனியார் அமைப்பினர் உச்சநீதிமன்றத்தில் மனு அளித்துள்ளனர்.
கூடலூர் – மைசூர் சாலை நிரந்தரமாக மூடப்படும் நிலை உள்ளதால், தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூடலூர் மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதை தொடர்ந்து கூடலூர் வழியாக மைசூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், வனவிலங்குகளின் பாதுகாப்பு கருதி கர்நாடக எல்லையில் இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை போக்குவரத்திற்கு தடை செய்யப்பட்டது. இந்த நிலையில், கூடலூர் – மைசூர் சாலையை 24 மணி நேரமும் முழுமையாக மூடவேண்டும் என கர்நாடக மாநில தனியார் அமைப்பினர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இது நீலகிரி மக்களின் வாழ்வில் பொருளாதார ரீதியாக தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதால், மாவட்ட நிர்வாகமும் தமிழக அரசும் நடவடிக்கை எடுக்க கோரி அம்மாவட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.