சர்க்கரை நோய்க்கு சிறந்த மருந்தாக பயன்படும் கோவக்காய், சந்தையில் நல்ல விலைக்கு விற்கப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம் தாளவாடியில் கோவக்காய் விவசாயத்தை சில விவசாயிகள் ஆர்வமுடன் ஈடுபட்டு வருகின்றனர். பல ஏக்கர் கணக்கில் விவசாயம் செய்யப்பட்டு தற்போது அறுவடைக்கு வந்து இருக்கும் கோவக்காய், கிலோ ஒன்றுக்கு 25 முதல் 30 ரூபாய் வரை விற்பனையாவதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இங்கு விளைவிக்கப்படும் கோவக்காய் தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. சர்க்கரை நோய் மற்றும் இதர நோய்களுக்கு சிறந்த மருந்தாக கோவக்காய் பயன்படுவதால், சில மருத்துவ நிறுவனங்கள் நேரடியாகவே வந்து கோவக்காயினை கொள்முதல் செய்கின்றனர்.