வட்டமலைபாளையத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்கள் ”கியூப்சாட்” எனப்படும் சிறிய ரக 8 செயற்கைக் கோள்களை உருவாக்கினர். அதன் செயல்பாட்டை சோதிக்கும் விதமாக, செயற்கை கோள்களை ஹீலியம் பலூன் மூலம் விண்ணில் ஏவி சோதனை மேற்கொண்டர். இந்த செயற்கைக்கோள்களில் பொருத்தப்பட்டுள்ள கேமரா மற்றும் ’ஏவியானிக்ஸ் சென்சார்’ கருவி மூலம் அழுத்தம், ஈரப்பதம் மற்றும் யுவி கதிர்களின் அளவை உயரத்திற்கு ஏற்றவாறு கணக்கிடமுடியும். சிறிய வகை செயற்கை கோள்களை விண்ணில் ஏவி சோதனை செய்யும் முயற்சியை மாணவர்கள் ஆர்வமுடன் பார்த்து ரசித்தனர்.