சி.டி.எஸ் நிறுவனம் 4 வாரத்திற்குள் 490 கோடி ரூபாய் தொகை செலுத்த வேண்டும்: சென்னை உயர்நீதிமன்றம்

காக்னிசன்ட் நிறுவனத்தின் 2 ஆயிரத்து 900 கோடி ரூபாய் வரி பாக்கியில், 490 கோடி தொகையை 4 வாரத்திற்குள் வருமான வரித்துறைக்கு செலுத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காக்னிசன்ட் டெக்னாலஜி சொலுயூஷன்ஸ் எனும் சி.டி.எஸ் நிறுவனம், அமெரிக்கா மற்றும் மொரிஷியஸ் நாடுகளில் வசிக்கும் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு விற்பனை செய்திருந்த 94 லட்சம் பங்குகளை கடந்த 2016 மே மாதம் திரும்ப வாங்கியது. இதற்காக 19 ஆயிரத்து 415 கோடி ரூபாயை வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு திருப்பி செலுத்தியது. இந்தத் தொகைக்கு 15 சதவீத வரியாக 2 ஆயிரத்து 912 கோடி ரூபாயை செலுத்த வேண்டும் என வருமானவரித்துறை சி.டி.எஸ் நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பியது. இந்த நோட்டீசை ரத்து செய்ய கோரி சி.டி.எஸ் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய உயர்நீதிமன்றம், நான்கு வாரங்களில் வரி பாக்கி 490 கோடி ரூபாயை வருமான வரித்துறைக்கு செலுத்த உத்தரவிட்டது.

Exit mobile version