கச்சா எண்ணெய் விலை உயரும் என சவுதி அரேபிய இளவரசர் எச்சரிக்கை

ஈரானுக்கு எதிராக உலக நாடுகள் நடவடிக்கை எடுக்காவிட்டால், கற்பனை செய்து பார்க்க முடியாத அளவுக்கு கச்சா எண்ணெய் விலை உயரும் என சவுதி அரேபிய இளவரசர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் கூறுகையில், ஈரானுக்கு எதிராக உலக நாடுகள் கடுமையான மற்றும் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால், கற்பனை செய்து பார்த்திராத வகையில் விலை உயர்வு இருக்கும் என்றும் எச்சரித்துள்ளார். ராணுவத்தை விட, அரசியல் மற்றும் அமைதி வழியில் தீர்வு காண்பது சிறப்பானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version