கச்சா எண்ணெய் விலை சரிவால் சிலிண்டர் விலை குறைப்பு!

நாடு முழுவதும் எரிவாயு சிலிண்டர் விலை குறைக்கப் பட்டுள்ளதாக இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.  சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிந்ததால், எரிவாயு சிலிண்டர் விலை குறைக்கப் பட்டுள்ளது. டெல்லியில் எரிவாயு சிலிண்டர் விலை 61 ரூபாய் 50 காசுகள் குறைக்கப்பட்டு 744 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மும்பையில் 62 ரூபாய் சரிந்து, 714 ரூபாய் 50 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 826 ரூபாயாக  இருந்த சிலிண்டர் விலை 65 ரூபாய் குறைக்கப்பட்டு, 761 ரூபாய் 50 காசுகளாக விற்கப்படுகிறது. கடந்த 2 மாதங்களில் இரண்டாவது முறையாக எரிவாயு சிலிண்டர் விலை குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version