இங்கிலாந்தில் சமூக இடைவெளியின்றி கடற்கரைகளில் கூட்டம் கூட்டமாக குவிந்த மக்கள்!!!

இங்கிலாந்தில் உள்ள முக்கிய கடற்கரைகளில் மக்கள் கூட்டம் அலைமோதுவதால், கொரோனா அச்சம் அதிகரித்துள்ளது. இங்கிலாந்தைப் பொறுத்தவரை கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 61 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. 36 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். பிரதமர் போரிஸ் ஜான்சன் நான்கு கட்டங்களாக ஊரடங்கை தளர்த்தி வருகிறார். இந்த நிலையில், கோடைக்கால வெப்பம் அதிகரித்துள்ளதால், கடற்கரைக்கு செல்ல மக்களுக்கு அனுமதியளிக்கப்பட்டது. ஊரடங்கால் வெளியே செல்லமுடியாமல் தவித்த மக்களுக்கு, பெரும் தளர்வாக இது அமைந்ததால், கூட்டம் கூட்டமாக கடற்கரையில் கூடியுள்ளனர். பிரபல கடற்கரைகளான போர்னிமவுத், ப்ரிக்டனில் அதிக அளவில் கூட்டம் காணப்பட்டது. சமூக இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டும் என்பதற்காக, காவல்துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டாலும், குடும்பத்தோடும், நண்பர்களோடும் பிக்னிக் வருவதுபோல பொதுமக்கள் வந்துள்ளனர். அதனால் ஊரடங்கு அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு வந்துவிட்டது என அரசுக்கு எதிராக விமர்சனங்கள் எழுந்துள்ளது.

Exit mobile version