புதுச்சேரியில் ரிக் ஷா ஓட்டுநரின் நண்பனாக வலம் வரும் காகம்

புதுச்சேரியில் காகம் ஒன்று ரிக் ஷா ஓட்டுநருடன் அன்பாக பழகி அவருடன் உணவருந்தும் நிகழ்வு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமத்திற்கு அருகில் உள்ள ஸ்டாண்டில் கடந்த 20 வருடத்திற்கும் மேலாக ரிக் ஷா ஓட்டி வருபவர் செல்வராஜ். இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு சவாரிக்கு சென்ற போது, அடிபட்டு பறக்க முடியாமல் கிடந்த காகத்தைக் கண்டுள்ளார். பின்னர், அந்த காகத்தை தன்னுடன் எடுத்து சென்ற செல்வராஜ், அதற்கு மருத்துவ உதவிகள் செய்து, ஒரு வாரத்திற்கு மேல் உணவிட்டு பாதுகாத்து, மீண்டும் பறப்பதற்கு உதவி செய்துள்ளார்.

அன்று முதல் அந்த காகமானது எங்கு சென்றாலும் தினமும் அந்த ரிக்ஷா ஸ்டாண்டிற்கு வந்துவிடுகிறது. செல்வராஜ் உணவருந்தும் போது, அவரிடம் இருந்து உணவை சேகரிக்கும் காகம், தன்னுடைய குஞ்சுகளுக்கு கொடுத்துவிட்டு, பின்னர் அவருடன் உணவருந்தும். இதனைக் கண்ட மற்ற தொழிலாளர்களும் தாங்கள் சாப்பிடும் நேரங்களில் அந்த காகத்திற்கு உணவளித்து வருகின்றனர்.

மற்றவர்களை விட தன்னைக் காப்பாற்றிய செல்வராஜிடமே அந்தக் காகம் மிகவும் பாசத்தோடும், நட்போடும் பழகி வருகிறது. காகம் ஒன்று ரிக் ஷா ஓட்டுநர் செல்வராஜ்- உடன் நட்போடு பழகுவதை ஆச்சர்யத்துடன் கணும் அப்பகுதி பொதுமக்கள், அவரது செயலை வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.

Exit mobile version