தேர்தல் அறிக்கையில் அறிவித்த பயிர் திட்டங்கள் நிறைவேற்றம்: அமைச்சர் செல்லூர் ராஜூ

அதிமுக அரசின் தேர்தல் அறிக்கையில் தெரிவித்த விவசாயிகளுக்கான பயிர்க்கடன் நிறைவேற்றப்பட்டுள்ளதாக கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்

சென்னை சேத்துப்பட்டில் உள்ள கூட்டுறவு சங்கங்களில் பதிவாளர் அலுவலகத்தில் அரசின் அறிவிப்புகளை மக்களிடம் கொண்டு செல்லும் பணிகள் குறித்து அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த 8 ஆண்டுகளில் பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் 32 லட்சத்து 72 ஆயிரம் பேருக்கு 117 கோடி வட்டியில்லா கடன் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் கூட்டுறவு வங்கிகள் நவீன மையமாக்கப்பட்டுள்ளதால், மக்களிடம் நம்பிக்கை அதிகரித்துள்ளதாகவும், இதன் மூலம் திமுக ஆட்சி காலத்தில் இருந்த 26 ஆயிரம் வைப்பு நிதி 52 ஆயிரம் உயர்ந்துள்ளதாக தெரிவித்தார்.

 

Exit mobile version