பயிர் கடன்களுக்கான மாத தவணையை முறையாக செலுத்துபவர்களுக்கு, வட்டியை முழுவதுமாக தள்ளுபடி செய்ய, மத்திய அரசு ஆலோசித்து வருவதாக, தகவல் வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு, 7 சதவீத வட்டியில், 3 லட்சம் ரூபாய் வரை, குறுகிய கால பயிர் கடன்களை, மத்திய அரசு வழங்கி வருகிறது.
இந்த கடன் தொகைக்கான மாத தவணையை, குறிப்பிட்ட கால கெடுவிற்குள் தவறாமல் செலுத்துபவர்களுக்கு, வட்டியில், 3 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதையடுத்து, 4 சதவீத வட்டியை, விவசாயிகள் செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், குறிப்பிட்ட கால கெடுவிற்குள் பயிர் கடன் தவணையை செலுத்துபவர்களுக்கு, வட்டியை முழுவதுமாக தள்ளுபடி செய்ய, மத்திய அரசு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.