பயிர்கடன் ரத்து; 15 நாட்களில் ரசீது – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

ராணிப்பேட்டை, வேலூர் மாவட்டங்களில் தேர்தல் பிரசாரத்திற்கு சென்ற முதலமைச்சருக்கு வழிநெடுகிலும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம் பேரம்பாக்கத்தில், அதிமுக மாவட்ட செயலாளர் ரமணா தலைமையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து செயிண்ட் மேரீஸ் பள்ளி நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. மாணவர்கள் கை தட்டி முதலமைச்சரை வரவேற்றனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் புதுகேசவபுரம் பகுதியில் அதிமுக கொடியை முதலமைச்சர் ஏற்றிவைத்தார்

ராணிப்பேட்டை மாவட்டம் புதுகேசவபுரம் பகுதியில் அதிமுக கொடியை முதலமைச்சர் ஏற்றிவைத்தார். அங்கு அவருக்கு அமைச்சர்கள் கே.சி.வீரமணி, நிலோபர் கபில் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ரவி உள்ளிட்டோர் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

“இந்தியாவிலேயே தாலிக்கு தங்கம் கொடுக்கும் ஒரே அரசு, அதிமுக அரசு தான்” -முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம்!

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் தொகுதிக்குட்பட்ட கைனூர், கணபதி நகர் பகுதியில் மகளிர் குழுவினருடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். அப்போது திரண்டிருந்த மக்கள் மத்தியில் பேசிய முதலமைச்சர் , இந்தியாவிலேயே தாலிக்கு தங்கம் ஒரே மாநிலம் தமிழ்நாடு மட்டும்தான் என்றார்.

பயிர்க்கடன் ரத்து; 15 நாளில் ரசீது – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதி

பயிர்க்கடன் ரத்து செய்வதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது என தெரிவித்துள்ள முதலமைச்சர், இன்னும் 10 அல்லது 15 நாட்களில் ரசீது வழங்கப்படும் என உறுதியளித்தார்.

விளம்பரங்களை பார்த்தாவது ஸ்டாலின் தெரிந்துகொள்ளட்டும்: முதலமைச்சர்

எதிர்க்கட்சிகள் செய்யும் அவதூறு பிரசாரங்களை முறியடிக்கவே, தமிழக அரசு சார்பில் பத்திரிகைகள், ஊடகங்களில் விளம்பரம் செய்யப்படுவதாக முதலமைச்சர் கூறியுள்ளார். அதிமுக ஆட்சியில் ஒன்றுமே நடக்கவில்லை என பேசி வரும் ஸ்டாலின், விளம்பரங்களை பார்த்தாவது தெரிந்து கொள்ளட்டும் என முதலமைச்சர் கூறினார்.

ஸ்டாலின் மீது முதல்வர் குற்றச்சாட்டு!

பல ஆண்டுகாலம் சட்டமன்ற தலைவராகவும், உள்ளாட்சித்துறை அமைச்சராகவும், துணை முதலமைச்சராகவும் இருந்த ஸ்டாலின், இப்போது தான் மக்களை பார்க்க ஆரம்பித்திருக்கிறார் என முதலமைச்சர் விமர்சித்தார். இப்போது போய் மனுக்கள் வாங்கி ஸ்டாலின் என்ன செய்யப்போகிறார் என்றும், அவரால் ஆட்சிக்கே வர முடியாது என்றும் முதலமைச்சர் கூறினார்

 

 

Exit mobile version