என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட குற்றவாளிகள் : சமூகவலைத்தளங்களில் மக்கள் வரவேற்பு

ஐதராபாத்தில் பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக் கொன்ற வழக்கில் கைதான 4 பேரும் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் சம்பவம் தொடர்பான ஹேஸ்டாக் டுவிட்டரில்  இந்தியா அளவில் முதல் இடத்தில் டிரண்டாகி  வருகிறது.

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் கடந்த மாதம் 27ஆம் தேதி கால்நடை பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்து கொல்லப்பட்டார். நாட்டையே உலுக்கிய இந்த சம்பவம் தொடர்பாக லாரி ஓட்டுநர் முகமது ஆரிப் மற்றும் நவீன், சிவா, கேசவலு ஆகியோரை ஐதராபாத் காவல்துறையினர் கைது செய்தனர்.

கைதான 4 பேரையும் தூக்கிலிட வலியுறுத்தி நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றன.இதனையடுத்து  பெண் மருத்துவரை கொலை செய்த வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து , கொலை செய்தது உறுதியானது. இந்நிலையில் நேற்றிரவு போலீசார், குற்றம் நடந்த இடத்திற்கு 4 பேரையும் அழைத்துசென்று எவ்வாறு கொலைசெய்தீர்கள் என செய்து காட்ட சொன்னதாக கூறப்படுகிறது.

 

அப்போது  4 பேரும் தப்பி செல்ல முயன்றதால் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். இந்த நிகழ்வு நாடு முழுவதையும் திரும்பி பார்க்க வைத்திருக்கிறது.மேலும் சமூகவலைத்தளங்களில் காட்டு தீயாய் பரவு இந்த தகவல், டுவிட்டரில் #Encounter #hyderabadpolice என்னும் ஹேஸ்டாக்கில் இந்தியா அளவில் முதல் இடத்தில் டிரண்டாகி  வருகிறது

 

Exit mobile version