சென்னையில் பதிவு செய்யாமல் இயங்கி வரும் 277 பெண்கள் விடுதிகள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சென்னையில் பதிவு செய்வதற்காக ஆயிரத்து 50 பெண்கள் விடுதிகளின் விண்ணப்பங்கள் மாவட்ட நிர்வாகத்திடம் அனுப்பப்பட்டுள்ளது. இதனிடையே அதில் உள் அடங்காத, பதிவு செய்யாத 277 பெண்கள் விடுதிகள் இயங்கி வருவதாக கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் நடத்திய ஆய்வில் இந்த முறைகேட்டுப் பட்டியல் தயாரிக்கப்பட்டது. அதன்படி சென்னையில் பதிவு செய்யாமல் இயங்கி வரும் 277 பெண்கள் விடுதிகள் மீது சிவில் மற்றும் கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், நீர் மற்றும் மின்சார விநியோகத்தை நிறுத்தவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
இதற்காக துணை ஆட்சியர் தரவரிசையில் உள்ள, சிறப்பு விசாரணைக் குழு நியமிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் முறைகேடாக இயங்கியதாக புகார்கள் அளிக்கப்பட்ட 7 விடுதிகளில் 5 விடுதிகள் மூடப்பட்டன. மேலும் 2 விடுதிகளை மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.