குற்றப்பின்னணி உடையவர்கள் தேர்தலில் போட்டியிட தடைக்கோரி தொடரப்பட்ட மனு மீதானதீர்ப்பு,தேதி குறிப்பிடாமல் உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
குற்றப்பின்னணி உள்ளவர்கள் தேர்தலில் போட்டியிடும் போது அது குறித்த விவரங்களை செய்தித்தாள்களில் விளம்பரப்படுத்த வேண்டும் என்றும்,இதனை தலைமை தேர்தல் ஆணையம் கண்காணிக்க வேண்டும் என்றும்,கடந்த 2014 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது.இந்நிலையில் தேர்தலில் போட்டியிடுவதை தடுக்கும் வகையிலான, முக்கியமான வழிகாட்டு நெறிமுறைகளை தேர்தல் ஆணையத்திற்கு வழங்க வேண்டுமென,பாஜகவின் வழக்கறிஞர் அஸ்வினி உபாத்தியாயா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதி ரோகின்டன் பாலி நாரிமன் தலைமையிலான அமர்வு முன்பு விசாரிக்கப்பட்டு வந்தது,இந்நிலையில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில்,தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.