பெண்களுக்கு எதிரான குற்றங்கள் இனி வரும் காலங்களில் நடக்க கூடாது என தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு வாணியர் பேரவை சார்பில் தொடங்கப்பட இலவச ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ், டி.என்.பி.எஸ்.சி பயிற்சி வகுப்புகள் தொடக்க விழா சென்னை கோயம்பேட்டில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று இலவச பயிற்சி வகுப்புகளை தொடங்கி வைத்தார். விழாவில் பேசிய அவர், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் இனி வரும் காலங்களில் நடக்க கூடாது என்றார். பெண்களை தாயாக பார்க்க வேண்டிய சூழல் ஏற்பட வேண்டும் என்றும், பெண்களை மதிக்க வேண்டும் என்று ஆண் பிள்ளைகளுக்கு எடுத்து கூறி வளர்க்க வேண்டும் என்றார். பெண்கள் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டியது அவசியம் என்றும் ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் அப்போது தெரிவித்தார்.