தமிழகத்தில் தான் குழந்தைகள் எதிரான குற்றங்கள் குறைவு

இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறைவாக இருப்பதாக தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ஆர்.ஜி.ஆனந்த் தெரிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், குழந்தைகள் போதைப் பொருள் பயன்படுத்துவதை தடுப்பது குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட ஆனந்த், குழந்தைகள் போதைப் பொருள் பயன்படுத்துவதை தடுப்பது குறித்து மாவட்ட நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் கடந்த ஆண்டை விட இந்தாண்டு குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 4 சதவீதம் குறைந்துள்ளதாக தெரிவித்தார்.

Exit mobile version