குடும்ப வன்முறை வழக்கில் கிரிக்கெட் வீரர் ஷமி

குடும்ப வன்முறை வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாத இந்திய கிரிக்கெட் வீரர் ஷமிக்கு எதிராக பிடியாணை பிறப்பித்து மேற்கு வங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் கிரிக்கெட் வீரரான ஷமி மற்றும் அவரது சகோதரர் ஹஸித் அகமது ஆகிய இருவரும் தன்னை துன்புறுத்தியதாகவும், கொலை செய்ய முயன்றதாகவும் ஷமியின் மனைவி ஹசின் ஜகான் கொல்கத்தா காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

இந்தப் புகார் தொடர்பான வழக்கு கொல்கத்தாவில் உள்ள அலிப்பூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதுதொடர்பாக முகமது ஷமி மற்றும் அவரது சகோதரர் நீதிமன்றத்தில் ஆஜராக நீதிபதி பலமுறை உத்தரவிட்ட போதும் இருவரும் ஆஜராகவில்லை.

இந்நிலையில், வழக்கு விசாரணையின் போது ஆஜராகாத கிரிக்கெட் வீரர் முகமது ஷமி மற்றும் அவரது சகோதர் ஹசித் அகமது இருவரும் அடுத்த 15 நாட்களுக்குள் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை எனில் அவர்களை கைது செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

Exit mobile version