உலக கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணி இங்கிலாந்து அணிக்கு 242 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது. லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும், இறுதிப்போட்டியில் நியூசிலாந்து – இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட் செய்ய தீர்மானித்தது.
இதையடுத்து களமிறங்கிய அந்த அணியில், நிர்ணயிக்கப்பட்ட 50 ஒவர்களில் 9 விக்கெட் இழந்த நிலையில், 241 ரன்கள் எடுத்துள்ளது.