பேருந்துகளில் மாதாந்திர பயணச்சீட்டுகளை பெற இனி கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை பயன்படுத்தலாம் என மாநகர போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் கணேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒவ்வொரு மாதமும் 2 லட்சத்து 61 ஆயிரம் பயணிகள் மாதாந்திர பயண அட்டைகளை பெற்று பயணடைவதாக குறிப்பிட்டுள்ளார்.. பொதுமக்கள் நலன் கருதியும், மின்னணு பணப்பரிவர்த்தனையை ஊக்குவிக்கிற வகையிலும் இனி, கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை பயன்படுத்தியும் பயண அட்டைகளைபெற்றுக் கொள்ளலாம் என கூறியுள்ளார்.