மக்களுக்கு அடிப்படை வசதிகள் கிடைக்கும் வகையில் புதிய மாவட்டங்கள் உள்ளது : அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்

மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் விரைந்து கிடைக்கும் வகையில், 5 புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டிருப்பதாக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்தார்.

வேலூர் மாவட்டத்தை மூன்றாக பிரித்து, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டிருந்தார். அதனடிப்படையில் வரும் 28ம் தேதி, ராணிப்பேட்டையில் நடைபெறும் நிகழ்ச்சியில், ராணிப்பேட்டை புதிய மாவட்டத்தை முதலமைச்சர் துவக்கி வைக்க உள்ளார்.

இதையொட்டி, வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், வணிகவரித்துறை அமைச்சர் கே.சி. வீரமணி மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் ஆகியோர், ராணிப்பேட்டையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைய உள்ள இடத்தை பார்வையிட்டனர். பின்னர், விழா நடைபெறும் இடம் மற்றும் விழாவுக்கான ஏற்பாடுகளையும் பார்வையிட்டனர்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், வரும் 26ம் தேதி கள்ளக்குறிச்சி புதிய மாவட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைக்க உள்ளதாக கூறினார்.

Exit mobile version